சென்னையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் பள்ளிகள் நீண்ட விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், அடுத்தடுத்து தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக தொடர்ந்து 33 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 14 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, அரையாண்டு தேர்வு மற்றும் பொதுத்தேர்வு அடுத்தடுத்து எதிர்கொள்ள உள்ள நிலையில் மாணவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.தேர்வை ஒத்தி வைக்கக்கூடாது என்றும் தேர்வை எளிமையாக நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் மாணவர்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில், அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற அளவில் மாணவர்களிடையே பலவித கேள்விகள் நிலவி வருகின்றது. இதற்கு, தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும்ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...