தமிழக அரசு கணினியை ஒரு பாடமாக மாண வர்களுக்கு கற்பிக்க
வைப்பதன் ஒரு முயற்சியாக 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சி
மற்றும் அரசு பள்ளிகளில் 6, 7,8 ,9, 10 ஆகிய வகுப்புகளுக்கு கணிப்பொறி
பாடத்திற் கென புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து
நகராட்சி மற்றும் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு விநியோகம்
செய்தது.
ஆட்சி மாற்றத்திற்குப் பின் 2011 ஆம் கல்வியாண்டில் வெறும்
ஏட்டுச் சுரைக்காயாக இருந்ததே தவிர, மாணவர்களுக்கு எவ்வித பயனும்
அளிக்கவில்லை. அரசு மற்றும் தனியாரின் எல்லா துறைகளும் நவீனமயமாக்கப்பட்ட
(கணினி மய மாக்கப்பட்ட) இக்காலத்தில் கணினியின் அடிப் படை அறிவு
மாணவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.
மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி. போன்ற அனைத்து வகை பள்ளி
களிலும் கணிப்பொறி பாடமானது கடந்த 15 ஆண்டுகளாக கற்பிக்கப்பட்டு
வருகின்றது. மேலும் எல்லா மேல்நிலைப்பள்ளிகளிலும் கணிப்பொறி அறிவியல் ஒரு
பாடமாக கடந்த 15 ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால், சமச்சீர் கல்வி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத்
தருணத்தில் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புமுதல் 10 ஆம் வகுப்புவரை கற்
பிக்கப்படும் கணினி கல்வியை அரசுப் பள்ளி களிலும் நடைமுறைப்படுத்தப்படும்
என்று அனை வராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் புத்தகங்களை
மட்டும் இரண்டு கல்வியாண்டுகள் விநியோகித்து, கணினி கல்வியை
மாணவர்களுக்குப் பயிற்றுவிக்காதது ஏன்?
மக்களின் அடிப்படைத் தேவைகளான எல்லா செயல்பாடுகளும்
கணினிமயமாக்கப்பட்டு வருகின்ற நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே விநியோகம்
செய்து வந்த புத்தகங்களைக் கூட கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டது.
இதுகுறித்து பெற்றோர்கள் மத்தியிலும், கல்வி யாளர்கள் மத்தியிலும்கூட போதுமான ஈர்ப்பைப் பெறவில்லை என்பது ஆச்சரியமானதே!
இவ்வளவுக்கும் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள்
தமிழ்நாட்டில் 21000 பேர்களுக்குமேல் இருக்கிறார்கள். இவர்களைப்
பயன்படுத்திக்கொண்டு, இந்த நவீன யுகத்தில் மிகவும் இன்றியமையாததான கணினிப்
பயிற்சி யைக் கற்றுக் கொடுக்கவேண்டியது அரசின் கடமையாகும்.
இதில் ஏன் தமிழ்நாடு அரசு கருத்துச் செலுத்தவில்லை?
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது;
அதன் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலைக்கு மிக
முக்கியமான காரணமே கணினிப் பயிற்சி போன்ற மிகவும் தேவையான பயிற்சியை அரசுப்
பள்ளிகள் புறக்கணிப்பதுதானே?
தனியார்ப் பள்ளிகளில் மாணவர்கள் குவிகிறார் கள் என்றால்,
அதற்குக் காரணம் கணினிப் பயிற்சி போன்ற கல்விக்கு அப்பள்ளிகளில்
முக்கியத்துவம் கொடுப்பதுதானே!
கல்வி மானியக் கோரிக்கையின்போது, மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் இதுபற்றிப் பேசியும் பயன் இல்லை.
அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்,
முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு
பெரும்பாலும் இருக்கிறது.
அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக் கப்பட்ட, ஏழை - எளிய
குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம்
அல்லவா? அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினிப் பயிற்சி அவசியம்
அல்லவா! இதில் சமூகநீதிக் கண்ணோட்டம் தேவை.
கேரள மாநிலத்தில் 2012 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் வெகு வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது.
கல்வியிற் சிறந்த தமிழ்நாடு ஏன் பின்னோக்கிப் போகவேண்டும்?
தமிழ்நாடு அரசு இத்திசையில் சிந்தித்து செயல்படட்டும்.
வெ.குமரேசன்
மாநில செயலாளர்
9626545446.
மாநில செயலாளர்
9626545446.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.
Thank you sir.
ReplyDeleteIthai Kavanikuma intha Govt..
ReplyDeleteசுவர் இருந்தா தான் சித்திரம் இப்படி இருக்கும் நிலையில் உடற்கல்வி,கணினி,ஓவியம்,தையல் போன்ற பிரிவுகளுக்கு பெரும்பாலான அரசு பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை இந்நிலையில் எப்படி ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.பள்ளிகளில் அனைத்து வகையான பாடங்களுக்கும் சம அளவில் முக்கியத்துவம் தரப்படவேண்டும், ஏன் படிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள் மற்ற சிறப்பு பாடங்களுக்கு தருவது இல்லை? இவற்றிற்கும் முக்கியதுவம் தந்தால் எதிர்காலத்தில் சிறந்த பாடகர்கள், இசையமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் , ஓவியர்கள். பேசன் டிசைனர்ஸ் போன்றவர்கள் கண்டிப்பாக உருவாகுவார்கள் சில மாணவர்களுக்கு படிப்பை தவிர மற்ற செயல்பாடுகளில் நன்றாக படிக்கும் மாணவர்களைவிட இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் , இம்மாதிரியான மாணவர்களை அடையாளம் கண்டு அம்மாணவர்களுக்கு பிடித்த துறையில் பயிற்சி அளித்து அவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்க பகுதிநேர பணியில் உள்ள சிறப்பாசிரியர்களால் திறம்பட செயலாற்றுவது கடினம் ஆகையால் மாணவர்கள் நலன் கருதியும் 🎨 பகுதிநேர சிறபாரியர்கள் நலன் கருதியும் இவர்களை இந்த அரசு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.மேலும் கணினி,தையல்,ஓவியம்,உடற்கல்விக்கு போன்ற ஏனைய படதிட்டத்திற்கு புத்தகங்களோ பாடதிட்டமோ இன்னும் கொடுக்கப்படவில்லை நூறு கிலோமீட்டர் நூற்று ஐம்பது கிலோமீட்டர் பள்ளி பயணம், மூன்று அரை நாட்கள் வேலை கொடுத்த இந்த அரசு மீதமுள்ள நாட்களுக்கு வழி செய்யவில்லையே!கொடுக்கும் ரூபாயும் பயணத்திற்கே கரைகிறதே! வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது?ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள் ஆனால் நாங்கள் அறப்பணியை அரைப்பணியாக செய்து கொண்டிருக்கிறோம். வயதும் செய்கின்ற பணியும் காலம் கடக்க இருக்கும் நாள் வெகு தொலைவில் பலருக்கு இல்லை. இதற்கு பணிநிரந்திரம் மட்டும்தான் உடனடி தீர்வு. எங்களது நிலைமைதான் என்ன?என்று ஆட்சியாளர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும். அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும் இந்த அரசாங்கத்தை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
ReplyDeleteசெந்தில்குமார் திருப்பூர்.
சுவர் இருந்தா தான் சித்திரம் இப்படி இருக்கும் நிலையில் உடற்கல்வி,கணினி,ஓவியம்,தையல் போன்ற பிரிவுகளுக்கு பெரும்பாலான அரசு பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை இந்நிலையில் எப்படி ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.பள்ளிகளில் அனைத்து வகையான பாடங்களுக்கும் சம அளவில் முக்கியத்துவம் தரப்படவேண்டும், ஏன் படிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள் மற்ற சிறப்பு பாடங்களுக்கு தருவது இல்லை? இவற்றிற்கும் முக்கியதுவம் தந்தால் எதிர்காலத்தில் சிறந்த பாடகர்கள், இசையமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் , ஓவியர்கள். பேசன் டிசைனர்ஸ் போன்றவர்கள் கண்டிப்பாக உருவாகுவார்கள் சில மாணவர்களுக்கு படிப்பை தவிர மற்ற செயல்பாடுகளில் நன்றாக படிக்கும் மாணவர்களைவிட இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் , இம்மாதிரியான மாணவர்களை அடையாளம் கண்டு அம்மாணவர்களுக்கு பிடித்த துறையில் பயிற்சி அளித்து அவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்க பகுதிநேர பணியில் உள்ள சிறப்பாசிரியர்களால் திறம்பட செயலாற்றுவது கடினம் ஆகையால் மாணவர்கள் நலன் கருதியும் 🎨 பகுதிநேர சிறபாரியர்கள் நலன் கருதியும் இவர்களை இந்த அரசு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.மேலும் கணினி,தையல்,ஓவியம்,உடற்கல்விக்கு போன்ற ஏனைய படதிட்டத்திற்கு புத்தகங்களோ பாடதிட்டமோ இன்னும் கொடுக்கப்படவில்லை நூறு கிலோமீட்டர் நூற்று ஐம்பது கிலோமீட்டர் பள்ளி பயணம், மூன்று அரை நாட்கள் வேலை கொடுத்த இந்த அரசு மீதமுள்ள நாட்களுக்கு வழி செய்யவில்லையே!கொடுக்கும் ரூபாயும் பயணத்திற்கே கரைகிறதே! வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது?ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள் ஆனால் நாங்கள் அறப்பணியை அரைப்பணியாக செய்து கொண்டிருக்கிறோம். வயதும் செய்கின்ற பணியும் காலம் கடக்க இருக்கும் நாள் வெகு தொலைவில் பலருக்கு இல்லை. இதற்கு பணிநிரந்திரம் மட்டும்தான் உடனடி தீர்வு. எங்களது நிலைமைதான் என்ன?என்று ஆட்சியாளர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும். அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும் இந்த அரசாங்கத்தை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
ReplyDeleteசெந்தில்குமார் திருப்பூர்.
kavanika vendiya news ethu...thanks for sharing this information.iam also computer science with b.ed.iam waiting for same job....
ReplyDeletePart time teachers a Permanent pannuna.muraia padijiddu kathukiddu erukkira nanga enna seia.muraia Seniority muulam poda vendum.summa suyanalam vendam.antha pakuthi near velaium kasu koduthal than kidaikkum & recommend um venum.athuvum enga kidda ella.
ReplyDeleteevan
B.Ed computer science gradute.
ஒரு நாள் கணினி ஆசிாியா் இல்லை எனறால் ஒரு வேலையும் நடக்காது அந்த காலம்
ReplyDeleteஆனால் இன்று கணினி ஆசிாியா் பாடம் நடத்துவதை தவிர அனைத்து வேலையும் செய்கிறாா்கள்
14 நலதிட்ட உதவிகளை செய்ய கணினி ஆசிாியா்கள் வேண்டும்
கணினி பாடம் நடத்த கணினி ஆசிாியா் பணியிடம் எற்படுத்த முன்வராத தமி்ழ் நாடு அரசு எங்கே
தோ்தல் வாக்குறுதிகள் எங்கே
அனைத்தும் குப்பையில் .