அகரம்
ஃ
பவுண்டேஷன் சமூக
மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக சென்னை-ஐ தலைமையிடமாக
கொண்டு இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும். 2010-இல்
தொடங்கப்பட்ட
"விதைத் திட்ட"த்தின் மூலம் இதுவரை சுமார்
1300 மாணவர்களின் கல்லூரிக் கனவை நிஜமாக்கி இருக்கிறோம். 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட
"தைத் திட்ட"த்தின் மூலம், பள்ளிக் கல்வி இடைநின்ற மாணவர்களுக்காக திறன் வளர்ப்புப் பயிற்சியை வழங்கிவருகிறோம்.
அகரம் செயல்படுத்திவரும் "விதை" மற்றும் "தை" திட்டங்கள் குறித்தும், உதவிக்கான விண்ணப்பங்களை அனுப்புவது குறித்தும் தகவல்களை
இத்துடன்
இணைத்துள்ளோம்.
உங்கள் பகுதியை சேர்ந்த, உதவி தேவைப்படும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயன்தரும் வகையில், இத்தகவல்களை பகிர்ந்துக்கொள்ள
வதில் உங்களது மேன்மையான உதவியை எதிர்பார்க்கிறோம்.
தகவல்களை பகிர்வதற்க்கான வழிமுறைகள்:
1.
இணைப்பில் உள்ள அகரம் திட்டங்களைப் பற்றிய ஆவணத்தை (Document) அச்சுசெடுத்து (Print Out) கொ
ண்டு,
உங்கள் பகுதியை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெரும்
பள்ளிகளுக்கு
சென்று, பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துவிட்டு, பள்ளி மாணவர்கள்
பார்க்கும் வகையில் பள்ளி தகவல் பலகையில் (Notice Board) அகரம் திட்டங்களைப் பற்றிய ஆவணத்தை ஓட்
டலாம்
.
2.
உங்கள்
ஊர் பஞ்சாயத்து தலைவர், மகளிர் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள்
மற்றும் இளைஞர்களிடம் குறிப்பாக பள்ளி கல்வி இடை நின்றவர்கள் (School Drop
Out) மத்தியில் அகரம் திட்டங்கள் பற்றியும் குறிப்பாக தைத் திட்டத்தை பற்றி எடுத்துக் கூற
லாம்
. உதவி தேவைபடுகிறவர்களை விண்ணப்பிக்க சொல்ல
லாம். அல்லது,
உங்கள் பகுதியை சேர்ந்த இடைநின்ற மாணவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டு
,
எங்களை தொடர்புக் கொள்ளலாம்.
தொடர்பு எண்கள்: +91 44 43506361 | Mobile : +91 9841891000
3. இந்த மின்னஞ்சல்-ஐ, உங்கள் மின்னஞ்சல் தொடர்பில் இருப்பவர்களுக்கு Forward செய்யலாம்.
சமூக
மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள், இந்த சமூகத்தில்
தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ள, அவர்கள் வாழ்வில், வளர்ச்சியில்
அக்கறையுள்ள தங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு எதிர்பார்க்கிறோம்.
நன்றியுடன்,
அகரம் பவுண்டேசன்.
Antony Samy .A |
Director
| Agaram Foundation
B3, Vijay Enclave, 29, Krishna Street, T. Nagar, Chennai - 600017
Tel : +91 44 43506361 | Mobile : +91 9790966602
மதன் ஸார்,மிக்க நன்றி ...தங்களது அகரம் உதவி பற்றிய இப்பகிர்விற்கு.அதன் இயக்குநனர் ஆண்டனி அவர்கள் நமது ஆசிரியர் நண்பர்களிடம் கேட்டுக் கொண்டது போல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் அரசு பள்ளியில் படித்து வரும் தகுதியுள்ள ஆனால் வாய்ப்புகள் இல்லாத மாணவர்களைக் கண்டறிந்து அடையாளப் படுத்தி அவர்களின் வாழ்க்கை திசையை முன்னோக்குப் பாதையில் வழிநடத்த இப்பகுதி உதவட்டும்...நம் ஆசிரியர் சமுதாயம் இப்பணியை மாணவரின் நலனில் அக்கறை கொண்டு முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையோடு...உமா
ReplyDelete