'கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில், தமிழகத்தில் மீண்டும் கன மழைபெய்யலாம்' என, தனியார் வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன.
'வங்க கடலின் தென்மேற்கு பகுதியில், புதிய காற்று அழுத்த தாழ்வு நிலை, இந்த இறுதிவாரத்தில் உருவாகலாம்' என, 'ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து, அந்த மையம், நேற்று வெளியிட்ட அறிக்கை:
இம்மாத இறுதி வாரத்தில் உருவாகும், காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழக கடலோர மாவட்டங்களில், மிதமான மழை துவங்கி, அதன்பின், தீவிரம் அடையலாம். இதன்பின்,காற்று அழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, கேரளா மற்றும் கர்நாடகாவில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே தகவல்களை, வேறு சில தனியார் வானிலை ஆய்வு மையங்களும் வெளியிட்டுள்ளன.
ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று முதல், டிச., 19 வரையிலான வானிலை அறிவிப்பை மட்டுமே வெளியிட்டுள்ளது. அதில், 'லட்சத் தீவு மற்றும் தென்கிழக்கு அரபி கடலில், காற்று மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், டிச., 19 வரை மழை பெய்யும்' என, கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...