Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப்பள்ளி மாணவா்களுக்கான உண்டு,உறைவிடசிறப்புப்பயிற்சி முகாமில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

       புதுக்கோட்டை டிச.23-புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ் வழியில்பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மீத்திறன் மாணவா்களை தோ்ந்தெடுத்து வருகிறஆண்டில் உயா் கல்வியினை அடையும் வகையிலும். 
 
       அரசுப் பொதுத்தோ்வில் அதிகமதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை பெறும் வகையிலும்பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை தூய மரியன்னைமேல்நிலைப்பள்ளியில் உண்டு உறைவிட சிறப்புப் பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
இப்பயிற்சி முகாமில் கணிதம், இயற்பியல். வேதியியல். உயிரியல். மற்றும் தமிழ்,ஆங்கிலம் ஆகியப் பாடங்களுக்கு சிறந்த பாட நிபுணா்களைக் கொண்டு பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவா்களின் மன அழுத்தத்தினைகுறைத்து நெறிப்படுத்துவதற்காக உளவியல் நிபுணா். மருத்துவ ஆலோசகா். உயா்கல்வியாளா்கள். ஆகியோர் கலந்துகொள்ளும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. அதன்படி இன்று 23ந்தேதி( புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சிக்குவந்திருந்த அனைவரையும் மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலா் திருமதி செ.சாந்திவரவேற்று பேசினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி வருமான வரித்துறை இணைஆணையா் திரு வி.நந்தகுமார் கலந்துகொண்டு மாணவ. மாணவிகள் பன்னிரண்டாம்வகுப்புஅரசுப்பொதுத்தோ்வினை எளிதாக எதிர்கொள்ளும் முறையினை விரிவாகவும்.விளக்கமாகவும் எடுத்துக்கூறி பேசும்போது கூறியதாவது, பாடப்பகுதியினை தயார்செய்யும்போது முதலில் பாடத்தின் அவுட்லைனை நினைவில் வைத்து மூலவார்த்தைகளை(கீவோ்ட்ஸ்) குறிப்பெடுத்து படிக்கவேண்டும்.
மேலும் பாடப்பகுதியின்எந்தப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது என்பதனையும் நீங்கள்புரிந்து படிக்கவேண்டும். அதனைத்தொடா்ந்து தோ்வு எழுதும்போது கொடுக்கப்படும்கேள்விகளுக்கு மூல வார்த்தைகள் எது என்பதை கண்டறிந்து விடை எழுத வேண்டும்.இதுமட்டுமல்லாமல் தோ்வு எழுதப் போகும்போது ஏற்படும் பயத்தினையும்.பதட்டத்தினையும் குறைக்கும் வகையில் தோ்வு தொடங்குவதற்கு சிலமணித்துளிகளுக்கு முன்பு தோ்விற்கு படிப்பதை நிறுத்திவிட்டு மனதை அமைதியாகவைத்து சில நிமிடங்கள் தியானம் செய்து உங்களது உடம்பில் உள்ள ஒவ்வொருபகுதியினையும் மேலிருந்து அதாவது தலையில் இருந்து கீழாக நினைத்துப் பார்த்துஅதன்பின் தோ்வினை எழுத தொடங்கவேண்டும். தோ்விற்கு நீங்கள் தயார் செய்யும்போதுமொத்த பாடத்தினையும் படிக்காமல் ஒவ்வொரு பாடத்தினையும் சுருக்கிகுறிப்பெடுத்துக்கொண்டு தோ்வின்போது அந்த குறிப்புகளை மீள்பார்வை செய்துதோ்வினை எழுதினால் அதிக மதிப்பெண் பெறலாம். பாலினை எவ்வாறு பதப்படுத்திவெண்ணை. நெய் எவ்வாறு பெறுகிறோமோ அதைப்போல நீங்கள் உங்களது எண்ணங்களைஒருமுகப்படுத்தி தன்னம்பிக்கையுடன் படித்தால் அரசுப் பொதுத்தோ்வில் அதிகமதிப்பெண் எடுத்து மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினைப் பெற்று புதுக்கோட்டைமாவட்டத்திற்கு பெருமை சோ்ப்பீா்கள் என்று நம்புகிறேன். நான் எவ்வாறுபல்வேறுஇடையூறுகளுக்கு இடையே படிக்கும் காலத்தில் பல சிறுகதவுகள் மூடினாலும்என்னுடையஅயராத முயற்சியினால் ஐ.ஆா்.எஸ் தோ்வில் முதன்மையான இடத்தினைப் பெற்று பெரியகதவான பாராளுமன்றக்கதவு திறந்து என்னை பாராட்டியதின் காரணமாக எனக்குஎப்படிநல்ல அங்கீகாரம் கிடைத்ததோ அதைப்போல நீங்களும் அயராத உழைப்பினாலும். விடாதமுயற்சியாலும் பல்வேறு இடையூறுகளை தாண்டி இந்த அரிய வாய்ப்பினை நன்குபயன்படுத்திக்கொண்டு சிறப்பாக இந்த உண்டு, உறைவிடசிறப்புப்பயிற்சி முகாமின்மூலமாக சிறப்புற கல்வி பயின்று உயா்கல்விபயின்று வாழ்க்கையில் உயா்ந்தஇலக்கினை அடையவேண்டும். அதாவது பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெறும்இப்பயிற்சியானது உங்களின் எதிர்கால உயா்கல்விக்கு மிகவும்சிறப்பானதாகும்.இவ்வாறு அவா் பேசினார். அதனைத்தொடா்ந்து அவா் சிறப்புப்பயிற்சிபெறும் ஒவ்வொரு மாணவரிடமும் சென்று மாணவா்களின் பெயா்களைக்கூறி கைகுலுக்கிஅரசுப்பொதுத்தோவில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கூறிய விதம் மாணவா்களிடம்மிகுந்த வரவேற்பினை பெற்றது. பின்னா் மாணவா்களின் சந்தேகங்களுக்கு சிறப்புறபதிலளித்து உற்சாகத்தினையும். தன்னம்பிகையினையும் ஏற்படுத்தினார். இந்தவழிகாட்டுதல் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட, மாவட்டக்கல்வி அலுவலா்திரு ப.மாணிக்கம், பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனா்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive