கன மழையால், மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட, அரசு
அலுவலகங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.சென்னை, கே.கே.நகரில்,
மாற்றுத்திறனாளி நலத்துறை இயக்குனரகம்; கிண்டி, திரு.வி.க., தொழிற்
பேட்டையில் சமூக நலம், சத்துணவு திட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன.
கன மழையால், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது.
பல அடி உயரத்திற்கு தேங்கி உள்ள தண்ணீரால், அலுவலகத்தில் இருந்த மருத்துவ
உபகரணங்கள் சேதம் அடைந்தன. அடையாறு ஆற்றின் வெள்ள பெருக்கால், சமூக
நலத்துறை அலுவலகத்தில் தண்ணீர் புகுந்து, முக்கிய ஆவணங்கள் நனைந்து உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...