வெள்ளம் சூழ்ந்த கல்லுாரி கட்டடங்களை ஆய்வு செய்ய, குழு அமைக்கப்படும்' என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
மழையில் சான்றிதழ்களை இழந்தோருக்கு, மறுபிரதி வழங்கும் முகாம்கள் நேற்று துவங்கின. உயர்கல்வித் துறைக்கான முகாமை, சென்னை, எழும்பூர் காயிதே மில்லத் கல்லுாரியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் பழனியப்பன், உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா ஆகியோர், கல்லுாரி விடுதி, நுாலகம், கணினிஆய்வகம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, செயலர் அபூர்வா கூறும்போது, ''விண்ணப்பம் அளித்தோருக்கு, ஒரு வாரத்தில், மறுபிரதி சான்றிதழ் வழங்கப்படும். வெள்ளத்தால், கல்லுாரிகள் சேதமடைந்ததை ஆய்வு செய்யவும், கட்டடங்களின் உறுதித் தன்மையை சோதிக்கவும், குழு அமைக்கப்படும்,'' என்றார்.வெள்ளத்தால் சேதமடைந்த, காயிதே மில்லத் கல்லுாரி, கணினி ஆய்வகத்தை சீரமைக்க,10 லட்சம் ரூபாய் வழங்குவதாக, அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...