மிலாது
நபி பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் 24-இல் நடக்க இருந்த பருவத் தேர்வுகள்
ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 5-இல் நடைபெறும் என சென்னைப் பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
மிலாது
நபியை கணக்கிடக் கூடிய பிறையானது டிச. 12-ஆம் தேதி தெரிந்தது. இதில்
இருந்து 12-வது நாளான 24-ஆம் தேதியே மீலாது நபி கொண்டாடப்பட வேண்டும் என
தமிழக அரசுக்கு அரசு தலைமை காஜி சலாலுதீன் முகமது அயூப் கடிதம்
எழுதியிருந்தார்.
இதையடுத்து, 23-ஆம் தேதிக்கு அறிவிக்கப்பட்டுருந்த அரசு விடுமுறையை 24-ஆம் தேதிக்கு (வியாழன்) மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அன்றைய தினம் நடைபெற விருந்த தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் ஒத்திவைத்துள்ளன. இதேபோல், சென்னைப் பல்கலைக்கழகமும் டிசம்பர் 24-ஆம் தேதி நடக்க இருந்த இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...