அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 2 கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,061 தொடக்க,
நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு
பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி ஒவ்வொரு பள்ளியில் இருந்து 6 பேர்
வீதம் 6,366 பேருக்கு அளிக்கப்படும். முதற்கட்டமாக டிச., 9 முதல் டிச.,11
வரையும், 2 ம் கட்டமாக டிச., 14 முதல் டிச., 16 வரையும் பயிற்சிகள்
அளிக்கப்படுகின்றன.
மேலாண்மை குழுவில் உள்ள தலைவர்கள், தலைமை ஆசிரி
யர்கள், <உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு
பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை
சட்டம் 2009 ன் முக்கியத்துவம், குழந்தைகளின் உரிமைகள், பேரிடர் மேலாண்மை,
நலக்கல்வி, மேலாண்மை குழு உறுப்பினர்களின் பணி, அரசு நலத்திட்டம், பள்ளி
வளர்ச்சி திட்டம் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதனை
அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு,
உதவித் திட்ட அலுவலர் சுரேஷ்குமார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...