Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலை உங்களைத் தேடி வர வேண்டுமா?

         தகுதி இருந்தால் உலகமே உங்களைத் தேடிவரும். தகுதி என்பதில் உள்ள ‘த’ என்பது தன்னம்பிக்கையையும் ‘கு’ என்பது குறிக்கோளையும், ‘தி’ என்பது திறமையையும் குறிக்கின்றது.

ஆம், உங்களுக்குத் தன்னம்பிக்கையும் குறிக்கோளையும் அடைவதற்கான திறமையும் இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது உறுதி. 
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கு என்ன செய்வது? என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது! தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் கீழ்க்காணும் மூன்று பண்புகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய தோல்விகளுக்கு நீங்களே முழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருபோதும் மற்றவர்களைக் குறை கூறாதீர்கள். 
திறமைகளை  வளர்த்துக் கொண்டே இருங்கள். 
சுயபட்சாதாபம் கொள்ளாதீர்கள். 
தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல், அத்தோல்விக்குப் பொறுப்பேற்று அது எவ்வாறு நேர்ந்தது என்றும். இனிமேல் தோல்வி நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் சிந்திக்க வேண்டும். சிந்திக்க சிந்திக்க தெளிவு பிறகும். தெளிவான மனம் ஆற்றலின் அட்சய பாத்திரமாக மாறும். மேலும் வெற்றி உன்னை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும் ஆனால் தோல்வி தான் உன்னை உனக்கே அடையாளம் காட்டும். தோல்விக்குப் பொறுப்பேற்கும் போதுதான் தன்னம்பிக்கையும் மனவலிமையும் கூடுகிறது. 
அத்துடன் திறமைகள் அதாவது சிந்திக்கும் திறன் தகவல் பரிமாற்றத்திறன் பிரச்சனைகளைத் தீர்க்கும்திறன் படைப்பாற்றல் திறன் இயக்கத்றன்  போன்றவற்றை வளர்த்துக் கொள்ளும்போது தன்னம்பிக்கையும் கூடவே வளர்கின்றது. நம்மாலும் முடியும் என்ற எண்ணமே தன்னம்பிக்கையாகும்.  ஒருபோதும் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிப் பரிதாபப்படாதீர்கள். ஒரு சிறிய விதியின் உள்ளே விருச்சம் இருப்பதைப் போல உங்களுக்குள்ளாக பரிபூரண ஆற்றல் மறைந்திருக்கிறது. அதைத் தட்டி எழுப்புங்கள். சவால்களைக் கண்டு அஞ்சாமல் தன்னபிக்கையோடு எதிர்கொண்டு அவற்றையெல்லாம் சாதனைகளாக்குங்கள். முதலில் தோல்வி நேர்ந்தாலும் முயற்சிக்க வெற்றிகள் மலரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். 
மேற்கண்ட தகுதியுடன் தொழில் சார்ந்த நுட்பத்திறனும் மனித உறவுத்திறனும்  உங்களுக்கு இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்! முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் தேவையான திறன்களையும் பண்புகளையும் வளர்த்துக் கொண்டு இலட்சிய சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம். 
- சிந்தனைக் கவிஞர்  முனைவர் கவிதாசன்




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive