மீண்டும்
பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளதன் காரணமாக ஏற்கெனவே ஒத்திவைத்து மறுதேதி
அறிவித்த தேர்வுகளை சென்னைப் பல்கலைக்கழகம் மறுபடியும் ஒத்திவைத்துள்ளது.
சென்னை
உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி முதல் தொடர் மழை
பெய்தது. இதனால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் இயல்பு
வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாப்
பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறுப் பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை ஒத்திவைத்து,
பின்னர் மறு தேதிகளை அறிவித்தன.
நவம்பர் 9-ஆம் தேதி முதல், 28-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 1-ஆம் தேதி முதல், 14-ஆம் தேதி வரை நடத்தப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து, 3 நாள்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக, டிச.1, 2-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளை மீண்டும் ஒத்திவைத்து சென்னைப் பல்கலைக்கழகம், திங்கள்கிழமை (நவ.30) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான மறுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...