தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை
நாட்களில், 9 நாள், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருவதால், சொந்த
ஊர் அல்லாத வெளிமாவட்டங்களில் பணிபுரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும், 2016ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 23 நாட்கள் இடம் பெற்றுள்ளன.
அதில், புத்தாண்டு
தினமான ஜனவரி, 1ம் தேதி, பொங்கல் பண்டிகை ஜனவரி, 15ம் தேதி, புனித வெள்ளி,
மார்ச், 25ம் தேதி, வங்கிக்கணக்கு முடிப்பு நாள் ஏப்ரல், 1ம் தேதி,
தெலுங்கு வருட பிறப்பு ஏப்ரல், 8 ம்தேதி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில்
வருகின்றன.
ஆகஸ்ட், 15ம் தேதி சுதந்திரதினமும்,
செப்டம்பர், 5ம் தேதி விநாயகர் சதுர்த்தியும், அக்டோபர், 10ம் தேதி ஆயுத
பூஜையும், டிசம்பர், 12 மிலாடிநபியும், திங்கள் கிழமை வருகின்றன. இதனால்,
சனி மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறையுடன் தொடர்ந்து, மூன்று நாள் விடுமுறை
கிடைக்கும் நிலை உள்ளது. வெளி மாவட்டங்களில் பணிபுரிவோர் தங்கள் சொந்த
ஊருக்கு செல்ல வசதியாக விடுமுறை வந்துள்ளதால், அவர்கள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...