Home »
» மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி: 80 பேருக்கு பதவி உயர்வு
அரசு
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 80 பேருக்கு பதவி உயர்வு
அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 80 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட
உள்ள முதுநிலை ஆசிரியர்கள், மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களின்
பட்டியலை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அந்த
பட்டியலில் உள்ளோர் பதவி உயர்வில் விருப்பமில்லை என்றால், 3 ஆண்டுகளுக்கோ
அல்லது நிரந்தரமாகவோ விருப்பம் இல்லாததற்கான கடிதத்தை, பள்ளிக் கல்வி
இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.'மேல்நிலை தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
வேண்டாம்' என தெரிவித்து, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு
பெற்ற முதுநிலை ஆசிரியர்களை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியேற்க
அனுமதிக்க கூடாது.
மேலும்
தலைமைஆசிரியராக பொறுப்பேற்கும் முன், அவர்களின் கல்வித்தகுதி,
வரையறுக்கப்பட்ட துறைத்தேர்வுகளின் தேர்ச்சி போன்ற விபரங்களை சரிபார்த்து
கொள்ள வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி
இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
This month transfer to HM promotion
ReplyDeleteWhat about +2 students studies
Tamilnadu govt idhai patri yellam kandu kolvadilai
Arasu palliyin nilamai idhu
Management school trs irku arasu velaye kidaithalum indha two months anuppa mattargal