கோயம்புத்தூரில் மாநில அளவிலான 58-வது குடியரசு தின தடகளப்போட்டிகள்
3 நாட்கள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகோப்பைகளும். சான்றிதழ்களும்,
ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
மாநில அளவிலான 58-வது குடியரசுதின தடகளப்போட்டிகள் கோயம்புத்தூா்
மாவட்டத்தில் உள்ள நேரு விளையாட்டரங்கில் 2015 டிசம்பா் 18,19, 20 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது.
துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் திரு கே.சி.வீரமணி,
மாண்புமிகு நகராட்சி, ஊரக வளா்ச்சி, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சா்
திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத்தலைவா் திரு பொள்ளாட்சி வ. ஜெயராமன்,
மாண்புமிகு கோயம்புத்தூா் மாநகராட்சி மேயா் திரு கணபதி ப.ராஜ்குமார், கோயம்புத்தூா்
மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி அா்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப, பாராளுமன்ற உறுப்பினா்கள்.
சட்டமன்ற உறுப்பினா்கள் திரு ஆா். துரைச்சாமி(எ) சேலஞ்சா் துரை, திரு வி.சி. ஆறுகுட்டி,
திரு தா. மலரவன் உள்ளிட்ட சான்றோர்கள் பலா் கலந்துகொண்டனா். விழாவிற்கு வந்திருந்த
அனைவரையும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் முனைவா் ச.கண்ணப்பன் வரவேற்று பேசினார். விழாவிற்கான
ஏற்பாடுகளை கோயம்புத்தூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் முனைவா் நா.அருள்முருகன் சிறப்பாக
செய்திருந்தார். இப்போட்டிகளில் சென்னை. கோயம்புத்தூா், கடலூா், திண்டுக்கல். ஈரோடு,
மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட 16 மண்டலங்களைச் சோ்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து விளையாட்டு விடுதிகள். பள்ளிகளைச் சோ்ந்த சுமார்
2400 விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். பல்வேறு வயதுக்கேற்ப வெவ்வேறு பிரிவுகளாக
பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகள் நடைபெற்ற இரண்டாம் நாளில் பணி
ஓய்வு பெற்ற காவல்துறை உயா்அலுவலர் திரு தேவாரம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிறைவு விழாவில் கோயம்புத்தூா் மாவட்ட கருவூலத்துறை அலுவலா் திரு ஆா். அருணாச்சலசுந்தரம்
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பரிசளிப்பு விழாவில் முதன்மை உடற்கல்வி ஆய்வா்(ஆண்கள்)
முனைவா் எஸ்.எஸ்.பீட்டா்சுப்புரெட்டி, முதன்மை உடற்கல்வி ஆய்வா்(பெண்கள்) திரு எம்.கலைச்செல்வன்
மற்றும் பலா் கலந்துகொண்டனா் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பரிசு கோப்பைகளும்,
சான்றிதழ்களும். ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...