சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் குறைந்தது.
விலைகள் குறைப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன.
அதன் அடிப்படையில் நேற்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகளும் குறைக்கப்பட்டது.
சென்னையில்
சென்னையை பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.61.38 ஆக இருந்தது 58 காசுகள் குறைந்து ரூ.60.80 ஆனது. டீசல் லிட்டர் ரூ.48-ல் இருந்து 23 காசுகள் குறைந்து ரூ.47.77 ஆனது.
டெல்லியில் பெட்ரோல் 58 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.60.48 ஆகவும், டீசல் 25 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.46.55 ஆகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் 46 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.65.93 ஆகவும், டீசல் 19 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.50.10 ஆகவும், மும்பையில் பெட்ரோல் 58 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.67.55 ஆகவும், டீசல் 23 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.47.77 ஆகவும் ஆனது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...