கடந்த
நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவை 4
மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி) சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டது.
இது
தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பி.கார்த்திக் ராஜா என்பவர் சென்னை உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: குரூப்-1 பதவிகளுக்கு காலியாக
உள்ள 74 பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி
நடத்தியது.
நவீன இயந்திரங்களைக் கொண்டு லட்சக்கணக்கான வினாத்தாள்களை விரைவாக திருத்தம் செய்து, ஒரு மாதத்தில் முடிவுகளை வெளியிட முடியும். ஆனால், தேர்வு முடிவு தள்ளிப் போவதால், 30 வயதைக் கடந்தவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
எனவே, கடந்த நவம்பரில் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வு முடிவை ஒரு மாதத்துக்குள் வெளியிடுமாறு டி.என்.பி.எஸ்.சி}க்கு என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வு முடிவை 4 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார்.
நவீன இயந்திரங்களைக் கொண்டு லட்சக்கணக்கான வினாத்தாள்களை விரைவாக திருத்தம் செய்து, ஒரு மாதத்தில் முடிவுகளை வெளியிட முடியும். ஆனால், தேர்வு முடிவு தள்ளிப் போவதால், 30 வயதைக் கடந்தவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
எனவே, கடந்த நவம்பரில் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வு முடிவை ஒரு மாதத்துக்குள் வெளியிடுமாறு டி.என்.பி.எஸ்.சி}க்கு என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வு முடிவை 4 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார்.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குக: ராமதாஸ் Posted by: Karthikeyan Published: Wednesday, December 23, 2015, 19:54 [IST] Share this on your social network: FacebookTwitterGoogle+ Comments Mail
ReplyDeleteசென்னை: வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை சமூக நீதிக்கு எதிராக இருப்பதுடன், ஆசிரியர் கல்வி படித்தோரின் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கி உள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசே வாய்ப்புகளை பறிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அது தான் சிறந்த நடைமுறையாகும். இந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிறந்த தலைமுறையை உருவாக்கினர். 2011-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதித் தேர்வும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு போட்டித் தேர்வும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட
தகுதித் தேர்வில் வெற்றி பெற 60% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்திருந்ததால், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தகுதித் தேர்வில் பங்கேற்ற 7 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானோர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு குறைவான தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினர். அதன் பயனாக தகுதி மதிப்பெண்களை 55% ஆக குறைத்த தமிழகஅரசு, நியமன நடைமுறையிலும் மாற்றம் செய்தது. அதுவரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பது தான் நடைமுறையாக இருந்தது. ஆனால், தகுதிகாண் (Weightage) மதிப்பெண் என்ற புதிய முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அதன்படி தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60% மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன் பட்டப்படிப்பு, ஆசிரியர் கல்விப் படிப்பு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களில் தலா 15%, 12 ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 10% சேர்த்து தரவரிசை தயாரிக்கப்படும் என்றும் அந்த வரிசைப்படி தான் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் 2013 ஆம் ஆண்டில் தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்தது. இந்த ஆணை தான் லட்சக்கணக்கானோரின் ஆசிரியர் பணி கனவை அடியோடு கலைத்திருக்கிறது. தகுதித் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் என்பது அனைவருக்கும் பொதுவானது. தகுதித் தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டு ஒரே மாதிரியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், தகுதிகாண் மதிப்பெண் அப்படிப்பட்டதில்லை. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளில் மதிப்பீடு செய்யும் முறை கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் விடையில் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தான் மதிப்பீடு செய்யப்படும். இதனால் அப்போது 80% மதிப்பெண்கள் எடுப்பதே பெருஞ்சாதனையாக இருந்தது. ஆனால், இப்போது 100% மதிப்பெண் எடுப்பதென்பது சர்வசாதாரணமாக மாறி விட்டது. இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது. அதேநேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருப்பதால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளில் பெரும்பான்மையானோர் 10&15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆவர்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteHello karthi bro pls tell me abt the gr4 in. 2016
ReplyDelete