சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழையால்பாதிக் கப்பட்ட 46 ஆயிரம் மாணவர் களுக்கு பாடப்புத்தகங்களும், 39 ஆயிரம் பேருக்கு நோட்டுகளும், 27 ஆயிரம் பேருக்கு சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங் களில் மழையால் பாதிக்கப் பட்ட மாணவ, மாணவி களுக்கு உடனடியாக பாடப்புத்த கங்கள், நோட்டுகள். சீருடை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து, மேற்கண்ட 4 மாவட்டங் களிலும் மழையால் பாதிக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களின் விவரம் விரைவாக கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மாணவர்கள் ஏறத்தாழ 30 ஆயிரம் பேருக்கு அண்மை யில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகளை பள்ளிக்கல்வித் துறை வழங்கியது.இந்நிலையில், டிசம்பர் 1-ம் தேதி பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட் டங்கள் மீண்டும் பாதிப்புக்குஉள்ளாகின. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனுக்குடன் பாடப்புத்தகம், நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறும்போது,‘‘மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் 46,416 மாணவ,மாணவி களுக்கு (ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை) விலையில்லா பாடப்புத்தகங்களும், 39,227 பேருக்கு (10-ம் வகுப்பு வரை) நோட்டுகளும், 27,049 பேருக்கு (ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை) சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன’’ என்றார்.
இதற்கிடையே, சென்னை சைதாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் வெள்ள நிவாரண முகாமில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 197 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் நேற்று புத்தகம், நோட்டு, சீருடை வழங்கினார். அப்போது, இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) எம்.பழனிச்சாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, மத்திய சென்னை மாவட்டக் கல்வி அதிகாரி ஜாய் செலீனா ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...