மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகளை பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடுவது எனவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் திருமகன் கூறியதாவது:வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டத் தேர்வுகளை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிப்பது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் தேர்வுக்கான மறு தேதிகள் இறுதி செய்யப்பட்டு, பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 6-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. மேலும், தேர்வுத் தாள் திருத்தும் பணிகளை வேகமாக நிறைவு செய்து பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்வின்போதே வகுப்புகள்:
தொடர் விடுமுறை காரணமாக அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் பருவத் தேர்வுகள் நடைபெறும்போதே, தேர்வு இல்லாதவர்களுக்கு வகுப்புகளை நடத்துமாறு கல்லூரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.பொதுவாக, பருவத் தேர்வு நடைபெறும்போது வகுப்புகள் நடத்தப்படாது. ஆனால், இந்த முறை இதற்கு அனுமதித்துள்ளோம். தேவைப்பட்டால் கூடுதல் நேரம் வகுப்புகளை நடத்துமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...