Home »
» 3 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மருத்துவப் பரிசோதனை
சென்னை,
திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு
தொற்றுநோய்கள் குறித்த பரிசோதனை திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.
அனைவருக்கும் நிறைவடையும் வரை பரிசோதனை தொடரும்.
மழை,
வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3
மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் சுமார் ஒரு மாதத்துக்குப் பின்னர்
திங்கள்கிழமை திறக்கப்பட உள்ளன.
இந்த
நிலையில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பயிலும்
மாணவர்களுக்கு உடல்நலத்தில் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியும் தொடர்
பரிசோதனையை பள்ளிக் கல்வித் துறையும், பொது சுகாதாரத் துறையும் இணைந்து
மேற்கொள்ள உள்ளன. திங்கள்கிழமை தொடங்கி, அனைத்து பள்ளிகளிலும் நிறைவடையும்
வரை பரிசோதனை தொடரும்.
பணியில்
131 நடமாடும் மருத்துவக் குழுக்கள்: மூன்று மாவட்டங்களிலும் 131 நடமாடும்
மருத்துவக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில் ஒரு
மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் இருப்பர். இவர்கள்
பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களைப் பரிசோதனை செய்வர். தொற்றுநோய்கள்
உள்ளிட்ட நோய்களுக்கான அறிகுறிகள் யாருக்காவது தென்பட்டால், அங்கேயே
சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து, மாத்திரைகள் அளிக்கப்படும். தேவைப்படின்
மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்படுவர்.
குடிநீர்
பரிசோதனை: மேலும் பள்ளி வளாகங்களில் உள்ள குடிநீர் பாதுகாக்கப்பட்ட
குடிநீராக உள்ளதா என்றும், சரியான அளவு குளோரின் உள்ளதா என்றும்
பரிசோதிக்கப்படும். இதுதவிர, பள்ளி வளாகத்தில் கொசுக்கள் பரவுவதற்கான
சாத்தியங்கள் இருக்குமாயின், அந்த ஆதாரங்களையும் அழிக்கும் பணிகளில்
சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...