மும்பை, டிச.2-நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டக்கோரி பிரதமருக்கு மும்பையில் உள்ள காந்தி நினைவு ஆங்கிலஉயர்நிலைப்பள்ளியில் பயிலும் 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதங்கள் மத்திய மந்திரியிடம் சேர்ப்பிக்கப்பட்டது.ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் பசிப்பிணியை போக்கவும், பள்ளிக்கு மாணவர்களின் வருகை விகிதத்தை அதிகப்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அப்போதைய முதல் அமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.அந்த திட்டம் இன்று பல மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் சிற்சில மாற்றங்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக் குழந்தைகளுக்காகஇந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது பெருமையே ஆனாலும், வெவ்வேறு பெயர்களில் செயல்படுவதை தவிர்த்து இந்த திட்டத்திற்கான முன்னோடி என்றவகையிலும், நாட்டிற்காக உண்மையிலேயே சிந்தித்து உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நாடு முழுவதும் இந்த திட்டத்திற்கு ‘காமராஜர் மதியம் உணவு திட்டம்‘ என பெயரை சூட்டி நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாட்டுங்கா லேபர் கேம்பில் உள்ள காந்தி நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளியின் அரசியல் பிரிவு மாணவர்கள் அந்த கடிதங்களின் வாயிலாக பிரதமருக்கு வலியுறுத்தி உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...