மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு
அலுவலகங்களுக்கு வரும் 24-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது
தொடர்பாக மத்திய அரசு பணியாளர்கள் நல்வாழ்வு ஒருங்கிணைப்புக் குழு இன்று
வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''மிலாடி நபி
பண்டிகைக்கான விடுமுறையை தமிழக அரசு 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதி
அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு
அலுவலகங்களுக்கு மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை 23-ம் தேதிக்குப்
பதிலாக 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...