Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

+2 பொருளியலில் 200/200 எடுப்பது ஈஸி

        +2 பொருளியலில் 200/200 எடுப்பது ஈஸி-விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, முதுகலைப் பொருளியல் ஆசிரியர் கி.பாஸ்கரன்

         “கவனச்சிதறல் இல்லாமல் புரிந்து படித்தால் பொருளியல் பாடத்தில் 200/200 எடுப்பது எல்லோருக்குமே சாத்தியம் தான்...” என்று நம்பிக்கையை விதைக்கிறார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, முதுகலைப் பொருளியல் ஆசிரியர் கி.பாஸ்கரன். சென்டம் பெற அவர் தரும் ஆலோசனைகள்...


* பொருளியலில் மொத்தம் 12 பாடங்கள் உண்டு. வினாத்தாளில் Part  A- ஒரு மதிப்பெண் வினாக்கள். இவை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தலா 4 வினாக்களும் பாடம் 1, 10ல் தலா 5 வினாக்களும் கேட்கப்படும். முதல் பகுதியில், ‘சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக’ என்று 14 வினாக்களும், இரண்டாவது பகுதியில் ‘பொருத்துக’ என்று 12 வினாக்களும், மூன்றாவது பகுதியில் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்று 12 வினாக்களும், நான்காவது பகுதியில் ‘ஓரிரு வார்த்தைகளில் விடையளி’ என்று 12 வினாக்களும் ஆக மொத்தம் 50 வினாக்கள் கேட்கப்படும்.

* Part-B- 3 மதிப்பெண் வினாக்கள். இதில் 15 வினாக்கள் கேட்கப்படும். பத்துக்கு விடையளிக்க வேண்டும். பாடம் 2, 5, 6, 7-ல் தலா இரண்டு 3 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். இவற்றைப் படித்தாலே 8 வினாவிற்கு விடையளித்துவிட முடியும். மீதமுள்ள 2 வினாவிற்கு பாடம் 1, 3 அல்லது 4 ஐ தேர்வு செய்து படித்தால் கண்டிப்பாக 10 வினாக்களுக்கும் விடையளிக்க முடியும்.

* Part-C- 10 மதிப்பெண் வினாக்கள். 10 வினாக்கள் கேட்கப்படும். 6 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். பாடம் 7, 10, 12ல் இருந்து தலா 2 வினாக்கள் கேட்கப்படும். இந்தப் பாடங்களைத் தேர்வு செய்து படித்தால் 6 வினாக்களுக்குச் சுலபமாக விடையளிக்க 
முடியும்.

* Part-D-20 மதிப்பெண் வினாக்கள். 6 வினாக்கள் கேட்கப்படும். 3 வினாவிற்கு மட்டும் விடையளிக்க வேண்டும். பாடம் 1, 3, 4 (அல்லது) 8, 9, 11... இந்த 6 பாடங்களில் இருந்து தலா ஒரு வினா வீதம் கேட்கப்படும். இவற்றைப் படித்தால் சுலபமாக விடையளிக்கலாம். 

* வரைபடங்கள் உள்ள கேள்விகளுக்கு விடையளிப்பது எளிது. அதனால் வரைபடம் உள்ள கேள்விகளை தேர்வு செய்யுங்கள். 3, 4, 5, 7, 8, 9, 11. ஆகிய பாடங்களில் வரைபடங்கள் உள்ள கேள்விகள் உண்டு. அவற்றை பலமுறை வரைந்து பயிற்சி பெறுங்கள். வரைபடங்கள் வரையும்போது X அச்சு, Y அச்சு உள்ள விலை, அளவு, உற்பத்தி போன்றவற்றை குறிப்பிட வேண்டும். விளக்கங்களை தெளிவாக எழுத வேண்டும். வரைபடங்களை பென்சில் கொண்டு மட்டுமே வரைய வேண்டும்.

* அட்டவணைகள் உள்ள வினாக்களையும் பலமுறை எழுதிப்பாருங்கள். பொருளாதார அறிஞர்களின் பெயர்கள், அவர்களின் கோட்பாடு, இலக்கணம், நூல்களின் பெயர்கள் சூத்திரங்கள் உள்ள வினாக்களை நன்கு படிக்க வேண்டும். 

* பொருளியல் பாடத்தை பொறுத்தவரையில் இது ஒரு நடைமுறைப் பாடம். அதனால் தினமும் நடத்தக்கூடிய பாடங்களை அன்றே படித்தும் எழுதியும் பார்த்தாலே முழு மதிப்பெண் பெற்றுவிடலாம். 

* நேர மேலாண்மை அவசியம். 50 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு 30 நிமிடம். 10 மூன்று மதிப்பெண் வினாக்களுக்கு 30 நிமிடம். 6 பத்து மதிப்பெண் வினாக்களுக்கு 60 நிமிடம். 3 இருபது மதிப்பெண் வினாக்களுக்கு 60 நிமிடம். ஈடுபாட்டோடு படியுங்கள். பொருளியல் பாடம் உங்களுக்குப் புகழ் தேடித் தரும். வாழ்த்துகள்! 




1 Comments:

  1. please post how to 200/200 in tamil,english,maths,physics,chemistry,computerscience +2
    please post how to 2000/200

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive