ஆக்ரா அம்பேத்கார் பல்கலை.,யில் பி.எட்., தேர்வு எழுதியவர்கள் 12,800பேர். ஆனால், 20,000 க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வு முடிவுகள் உள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தேர்வு முடிவில் ஏற்பட்ட இந்த குழப்பம் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல்கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தேர்வில் ஏற்பட்ட இந்த குழப்பம் குறித்து பேராசிரியர் மனோஜ் ஸ்ரீவட்சவாவிடம் கேட்ட போது, இதன் மூலம் 7000 மேற்பட்ட போலி மாணவர்கள் பல்கலை.,க்கு உட்பட்ட பல தனியார் கல்லூரிகளில் படிப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல தனியார் கல்லூரிகள்,நிர்ணயிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை அளவை விட கூடுதலாக மாணவர்களை சேர்த்துள்ளனர். காலியிடங்கள் இருப்பதாக பொய் சொல்லி அவர்களுக்கு கல்லூரியில் இடம் அளித்துள்ளனர். அந்த கூடுதல் மாணவர்களும் தேர்வு எழுதி உள்ளனர். அதனாலேயே தேர்வு முடிவில் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.12,800 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 20,089 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தது எப்படி என விளக்கம் கேட்டு அனைத்து தனியார் கல்லூரிகளுக்கும் பல்கலை., துணைவேந்தர் முகம்மது முஜாமில் கடிதம் அனுப்பி உள்ளார். இது தொடர்பாக விசாரிக்க கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களின் பட்டியலையும் கல்லூரிகளிடம் கேட்டுள்ளோம் என்றார்.
அம்பேத்கார் பல்கலை.,க்கு உட்பட்ட 191 பி.எட்., கல்லூரிகளில் படிக்கும்பல மாணவர்களுக்கு வரிசை எண் வழங்கப்படாமல் இருந்திருக்கலாம். அல்லது இறுதிதேர்வுக்கு முன் கடைசி நிமிடத்தில் வரிசை எண் அளிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கல்லூரிக்கு வராமலும், நுழைவு தேர்வில் கூட தேர்ச்சிபெறாத மாணவர்களுக்கும் தேர்வு எழுதி அனுமதி அளிக்கப்பட்டு, வரிசை எண் அளிக்கப்பட்டிருப்பதால் இத்தகைய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தேர்வு குழப்பம் விசாரணையுடன், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குறித்த புள்ளி விரபங்களை சேகரிக்கும் பணியில் பல்கலை., நிர்வாகம் தீரவிமாக இறங்கி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...