Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு இலவச லேப் டாப்களில் 'விண்டோஸ் 10': விரைவில் வருகிறது தொடுதிரை வசதி

       தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச லேப்டாப்களில், விரைவில் 'விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம்' (ஓ.எஸ்.,) வசதி செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக 'லேப்டாப்'களில் தொடுதிரை வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
 
          பள்ளி மாணவர்களுக்கு 14 வகை நலத்திட்டங்களை அரசு வழங்குகிறது. இதில், இலவச 'லேப்டாப்' பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக 'லேப்டாப்களில்' ஓ.எஸ்., வசதியை அதிகரிக்க தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.இதையொட்டி, தமிழகத்தில் 2015 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப்களில் 'விண்டோஸ் 8.1' வசதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
           இதன் தொடர்ச்சியாக மதுரை, நெல்லை, துாத்துக்குடி, விருதுநகர், திருச்சி உட்பட 9 தென் மாவட்டங்களில் முதற்கட்டமாக ஓ.எஸ்., வசதி மேற்கொள்ளும் பணிகளை எல்காட் உதவியுடன் மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் மதுரையில் துவங்கியுள்ளனர். 'விண்டோஸ் 8.1' வசதியை அடுத்து 'விண்டோஸ் 10' வசதியை எளிதில் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 
 
          அவ்வாறு மேற்கொள்ளும்பட்சத்தில் லேப்டாப்களில் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) வசதி கிடைக்கும்.இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவன தமிழக ஒருங்கிணைப்பாளர் பிரியா கூறியதாவது:தமிழகத்தில் 2014ம் ஆண்டில் வழங்கப்பட்ட லேப்டாப்களில் 'விண்டோஸ் 7' வசதி தான் இருந்தது. இதனால் வேகம் மற்றும் புதிய 'வெர்ஷன்' மிக குறைவாக இருந்தது. இதை அதிகரிக்கவும், உயர்கல்வியில் மாணவர்களுக்கு பல்வேறு வசதிகள் பெறும் வகையில் கூடுதல் ஓ.எஸ்., வசதி மேற்கொள்ளும் தொழில்நுட்ப பணிகள் மைக்ரோசாப்ட் நிறுவன நிதி உதவியுடன் நடக்கிறது.தற்போது மதுரை மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரம் லேப்டாப்களில் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் மாநில அளவில் 1.50 லட்சம் லேப்டாப்களில் இவ்வசதி மேற்கொள்ளப்படும். 'விண்டோஸ் 10' வசதி செய்யப்படும் பட்சத்தில் சில ஆண்டுகளில் தொடுதிரை, 'ஸ்கிரீன் இமேஜ்', உட்பட 'ஆண்ட்ராய்டு' அலைபேசியில் உள்ள வசதிகளை 
லேப்டாப்களில் கொண்டுவரலாம், என்றார்.




3 Comments:

  1. The students must have a knowledge about how to operate laptop for that please give some basic knowledge from 6-10 standard then you give laptop is good.

    ReplyDelete
  2. Whatever technology would they have give . Students only use those for to see movie.

    ReplyDelete
  3. computer with b.ed teaches?????????????????????????


    ------what we do---

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive