அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு அறிவிப்பானது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இதுதொடர்பான சுற்றறிக்கையை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்ப பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். காய்கறிகள்-குளோரின் மாத்திரைகள்: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தக் கடைகளில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.23-க்கு விற்கப்பட்டாலும், வெளிச் சந்தையில் கிலோ ரூ.45-க்கு விற்கப்படுகிறது. எனவே, கூடுதலாக 100 டன் உருளைக்கிழங்கு, 75 டன் வெங்காயம் ஆகியவற்றை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும்.
நோய்த் தொற்றைத் தடுக்க வீடுகளுக்கு தலா அரை கிலோ பளீச்சிங் பவுடர், தண்ணீரை சுத்தம் செய்ய 20 குளோரின் மாத்திரைகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அளிக்கப்படும். இதற்காக உடனடியாக 2 ஆயிரம் டன் பிளீச்சிங் பவுடர்-ஒரு கோடி குளோரின் மாத்திரைகள் கொடுக்கப்படும். இப்போது நடத்தப்பட்டு வரும் 1,105 மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும்.
துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள்: குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கு நோய் தடுக்காமல் இருக்க தடுப்பூசி போடப்படும். மேலும், அவர்களுக்கு பாதுகாப்பு முக கவசங்கள், கையுறைகள், மழை கோட் உள்ளிட்டவை அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...