வெள்ளம் பாதித்த பகுதிகளில், மக்கள் நிற்கதியாக தவிக்கும் நிலையில், ஒரு
குடிநீர் பாக்கெட், 10 ரூபாய்க்கும், ஒரு வாழைப்பழம், 20 ரூபாய்க்கும்
விற்கும் கொடூரம் சென்னையில் நடக்கிறது.
சென்னை, சைதாபேட்டை பகுதியில், நேற்று காலை, வழக்கமாக, ஒரு ரூபாய்க்கும்
விற்கும் குடிநீர் பாக்கெட், 10 ரூபாய்; ஒரு வாழைப்பழம், 20 ரூபாய்; 10
ரூபாய் பிஸ்கட் பாக்கெட், 20 ரூபாய்க்கு விற்கப்பட்டன. அங்குள்ள ஓட்டல்
மூடப்பட்டு, டோக்கன் கொடுத்து உணவுகள் தரப்பட்டன. இரண்டு இட்லி, 50
ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் போல், நேற்றும், அரை லிட்டர் பால் பாக்கெட், 100
ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. குடிநீர் கேன், 50 - 75 ரூபாய் வரை,
அநியாயமாக விலை வைத்து வியாபாரிகள் விற்றனர். விலை உயர்வு கடும்
அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பாதிப்பு பகுதி மக்கள், இதுவாவது
கிடைக்கிறதே என, வேறு வழியின்றி வாங்கிச் சென்றனர்.
'ஆபத்து நேரத்தில் மக்களுக்கு முடிந்த அளவு உதவி செய்வதை விட்டுவிட்டு,
இதுபோன்று கூடுதல் விலை வைத்து விற்பது மனிதாபிமானமற்ற செயல்' என, சமூக
ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முட்டை, பிரட் தட்டுப்பாடுமெழுகுவர்த்தியும் இல்லை
சென்னை முழுவதும் மின் தடை நீடிப்பதால், மெழுகுவர்த்திக்கு கடும்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடைகளில் இருந்த, 'ஸ்டாக்' ஒரு நாளுக்கு கூட
போதுமானதாக இல்லை. எமர்ஜென்சி விளக்கு இல்லாத வீடுகள், குடிசைப்
பகுதிகளில், சிம்னி விளக்கு ஏற்றக் கூட, கெரசின் கிடைக்கவில்லை. மழை
பாதிப்பு பெரிதாக இல்லாத பகுதிகளில், சமையல் எண்ணெய், முட்டை, பிரட்
உள்ளிட்ட பொருட்கள் எந்த கடைகளிலும் கிடைக்கவில்லை; நிலைமை சீராக, ஓரிரு
நாளாகும் என, வணிகர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...