தில்லியில் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடு அமல்படுத்தப்படவுள்ள ஜனவரி 1
முதல் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், தலைநகரில் உள்ளபள்ளிகளுக்கு
விடுமுறை அளிப்பது தொடர்பாக தில்லி அரசு பரிசீலித்து வருகிறது.இதுகுறித்து,
துணை முதல்வரும், மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஒற்றைப் படை மற்றும் இரட்டைப் படை பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் மீது கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு எங்களுக்கு பரிந்துரை வந்துள்ளது.அதுகுறித்து பரிசீலித்து வருகிறோம். தேவையேற்பட்டால், அந்த காலகட்டத்தில் தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.அதிரடியாக அதிகரித்துள்ள காற்று மாசு குறித்து, பள்ளி முதல்வர்களும், ஆசிரியர்களுமே மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தில்லியில் சுமார்26 லட்சம் மாணவர்கள் இருப்பதால், காற்று மாசு காரணமாக அவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மணீஷ் சிசோடியா கூறினார்.இதுகுறித்து அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தில்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு டிசம்பர் இறுதி வாரம் முதல் ஜனவரிமுதல் வாரம் வரையில் குளிர்கால விடுமுறை அளிக்கப்படும். ஒருவேளை கல்வித்துறை ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கும் பட்சத்தில், அது மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் இருக்காது' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...