தற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ்
இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "li-fi" ஆகும்.
இதன் சிறப்பு, ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று
கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?
இந்த வேகத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஆல்பம், அதிக டெஃபனிஷன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணிமைக்கும் நொடியில் டவுன்லோடு செய்யலாம்.
இந்த வேகத்ற்கு காரணம் இந்த டெக்னாலஜியில் LED
லைட்டுகளை பயன்படுத்தப்படுவதே. இதற்காக கண்ணால் காணக்கூடிய ஒளி யை தகவல்
தொடர்புக்காக பயன்படுத்துகிறது. இந்த நெட்வர்க் மிகவும் பாதுகாப்பானதும்
கூட.
இதனை மிகவும் சிறிய சிப் பில் வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.
இப்போதுள்ள டெக்னாலஜியில் இது மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
எடின்பர்க் யுனிவர்சிட்டி பேராசிரியர் 'ஹரால்டு ஹாஸ்' ன் வழிகாட்டுதலி்ல்
அமைக்கப்பட்ட குழு இந்த சாதனையை படைத்துள்ளது. தரைத்தளத்திற்கு இணையாக
இந்த ஒளி பரவுகிறது. அதனால் நெட்வொர்க்கின் திறனை இது
அதிகப்படுத்துகிறது. ஆனால் இதில் பயன்படுத்தப்படும் ஒளி அலைகள் சுவர்களில்
ஊடுருவ இயலாது என்பது இதன் ஒரு குறை.
இது குறித்து பேராசிரியர் ஹாஸ் கூறுகையி்ல், " இதன் எளிய உள்கட்டமைப்பு
இதனை பரவலாக பயன்படுத்தப்படும்படி வழிவகை செய்கிறது. இனி வரும் காலங்களில்
ஒளி விளக்குகளால் மட்டுமல்லாமல், இந்த LI-FI மூலம் உலகம் பசுமையாக
மின்னப்போகிறது" என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தற்போதைய வேகமான உலகம், இன்னும் அதிவிரைவான உலகமாக மாறப்போகிறது என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...