அரசுப் பணியிலுள்ள ஆண்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை
அரசுப் பணியில் உள்ள ஆண்கள், மனைவியில்லாமல் தனியாக குழந்தைகளை வளர்த்து
வந்தால் அவர்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அளிக்க 7-ஆவது
ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.இப்போது அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு
மட்டுமே குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, ஒரு ஊழியர் தனது மொத்த பணிக்காலத்தில் அதிகபட்சம் 730 நாள்கள் (2 ஆண்டுகள்) விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும்.அரசு ஊழியர்கள், 18 வயது வரையுள்ள தங்கள் பிள்ளைகளைப் பராமரிக்க இந்த விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையிலான 7-ஆவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் வியாழக்கிழமை அளித்தது. அதில், ஆண்களுக்கான குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளதாவது:இப்போதுள்ள சூழ்நிலையில் ஆண்களும் தங்கள் குழந்தைகளைத் தனியாக வளர்க்கும்பணியை ஏற்க வேண்டியுள்ளது. எனவே, குழந்தைகள் பராமரிப்பு விடுப்பை ஆண் ஊழியர்களுக்கும் அளிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.இந்த விடுப்புக் காலத்தில், முதல் 365 நாள்களுக்கு முழுச் சம்பளத்தை அளிக்கலாம். அடுத்த 365 நாள்களுக்கு 85 சதவீத சம்பளத்தை வழங்கலாம்.கணவரில்லாத பெண் ஊழியர்களும் தனியாக குழந்தைகளை வளர்க்கும்போது கூடுதல் சுமையை ஏற்க வேண்டியுள்ளது. அவர்கள் குழந்தைப் பராமரிப்பு விடுப்பை ஓராண்டில் 3 பிரிவுகளாக எடுப்பதற்குப் பதிலாக 6 பிரிவுகளாக எடுக்கலாம் என்ற சலுகையை வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சகம் விளக்கம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு அளிக்க 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.
இது மத்தியஅரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.இந்தச் செலவானது, நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கும் இலக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ஊதியக் குழு பரிந்துரை என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இப்போது அதில் உள்ள பரிந்துரைகள் தெரிய வந்துள்ளன.எதிர்காலத்தில் நிகழும் சில மாற்றங்களைக் கருத்தில் கொண்டுதான் அரசு இலக்குகளை நிர்ணயித்து வருகிறது. எனவே ஊதியக் குழு பரிந்துரையால் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் இலக்கில் பாதிப்பு ஏற்படாது என்றார் அவர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...