தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் உயர்கல்வியை தொடர, முன் அனுமதி பெறுவது கட்டாயம் என, தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக
உயர்கல்வியை தொடர, அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பகுதி நேரமாகவோ, தொலை
துார கல்வி மையங்கள் வாயிலாகவோ உயர்கல்வியை தொடர அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு, ஊக்க ஊதியம் போன்வற்றுக்கு கல்வி தகுதிகள் மதிப்பீடு
செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அரசு பணியில் சேரும் பலர் உயர்கல்வியை
பகுதி நேரமாகவும், தொலைதுாரக்கல்வி வாயிலாகவும் தொடர்ந்து வருகின்றனர்.
ஆனால், துறை அனுமதி இன்றி உயர்கல்வியில் சேர்பவர்கள், பல்வேறு சிக்கல்களை
எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், உயர்கல்வி பயில விரும்பும் ஆசிரியர்கள்
முன் அனுமதி பெறுதல் தொடர்பாகவும், யாரிடம் பெறவேண்டும் என்பது குறித்து
குழப்பங்கள் எழுந்ததால், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில், கோவை மாவட்டத்தை
சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மூலம் தகவல்கள் பெறப்பட்டது.
அதன் படி, எம்.பில்., பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் சேர்பவர்கள்
துறை தலைவரான பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று
இருப்பது அவசியம். பி.எட்., எம்.எட்., போன்ற படிப்புகளுக்கு, பள்ளி
தலைமையாசிரியரிடமே முன் அனுமதி பெற்றிருந்தால் போதுமானது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்ட நகல் வெளியிட முடியுமா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete