வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி
மாற்றக் கோரி வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, ஓட்டுச்சாவடி அலுவலர்கள்,
நாளை முதல் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.பட்டியலில் மாற்றம் கோரி விண்ணப்பம்
அளித்தவர்கள், தங்கள் பெயர், முகவரி விவரம் சரியாக இடம் பெற்றுள்ளதா என,
இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இரண்டாவது கட்டமாக, விண்ணப்பங்கள், 'ஸ்கேன்'
செய்யப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இவற்றை கொண்டு,
கள ஆய்வுக்கான விண்ணப்பம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில்,
விண்ணப்பதாரர் விவரம் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. ஒரு சில மாவட்டங்களில்,
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், கள ஆய்வை துவக்கி
உள்ளனர்.பெரும்பாலான மாவட்டங்களில், நாளை முதல் கள ஆய்வை துவக்க
உள்ளனர். ஆய்வின் போது விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் சரியாக இருந்தால்,
ஓட்டுச்சாவடி அலுவலர், தனக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில், 'சரி' என
குறிப்பிடுவார். தவறு இருந்தால், 'மொபைல் ஆப்ஸ்' மூலம், உடனடியாக திருத்தம்
மேற்கொள்வார்.
கள ஆய்வு விவரமும், உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவேற்றம்
செய்யப்படும். இப்பணி டிச., 5க்குள் முடிக்கப்படும் என, தேர்தல் பிரிவு
அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று சிறப்பு முகாம்கள்
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்டம்பரில் துவங்கி,
அக்., 24ல் முடிந்தது. மூன்று நாள் சிறப்பு முகாம் நடந்தது. வாக்காளர்
பட்டியலில், பெயர் சேர்க்க, 17 லட்சம்; நீக்க, 1.76 லட்சம்; பெயர்
திருத்தம் செய்ய, 2.69 லட்சம்; முகவரி மாற்ற, 1.76 லட்சம் பேர்
விண்ணப்பித்தனர். முதல் கட்டமாக, விண்ணப்பத்தில் இருந்த விவரங்கள்
கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்தல் கமிஷன் இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...