முகநூலில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக ஊட்டி வக்கீலை போலீசார்
கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த தேனாடு கிராமத்தை
சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 40). இவர் ஊட்டியில் வக்கீலாக பணியாற்றி
வருகிறார்.
இவர் மீது அ.தி.மு.க. நகர செயலாளர் தேவராஜ் ஊட்டி நகர
மத்திய போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில்
கூறப்பட்டுள்ளதாவது:-
ஊட்டியை சேர்ந்த வக்கீல் ஸ்ரீதரன் தனது முகநூல் பக்கத்தில் முதல்-அமைச்சர்
ஜெயலலிதாவை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் படம் மற்றும் செய்தி வெளியிட்டு
விமர்சித்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
வக்கீல் கைது
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் வக்கீல் ஸ்ரீதரன் மீது வழக்குப்பதிவு செய்து
அவரை கைது செய்தனர். வக்கீல் ஸ்ரீதரன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்பட
3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை போலீசார்
கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் வைத்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...