Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏழாவது சம்பள கமிஷன் சம்பள உயர்வு பரிந்துரையால் பணித்திறன் அதிகரிக்கலாம்!

        மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை மகிழ்ச்சி அளிக்கும். மத்திய அரசு ஊழியர்கள், 48 லட்சம் பேர் மட்டுமின்றி, பென்ஷன் பெறுவோரும் பயனடைவர். இந்த பரிந்துரையை அரசிடம் தயாரித்து சமர்ப்பித்த நீதிபதி மாத்துாரின் நுாற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட அறிக்கையில், சில புதிய அணுகுமுறைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. 

         இதன்படி, கடைநிலை ஊழியர் சம்பளம், மாதத்திற்கு, 18 ஆயிரம் ரூபாய். மத்திய அரசின் கேபினட் செயலர் அந்தஸ்தில் இருப்போருக்கு, மாதச் சம்பளம், 2.25 லட்சம் ரூபாய். அரசு ஊழியர் சம்பளம், 16 சதவீதம் உயரும். அதே போல பென்ஷன் உயர்வு, 24 சதவீதமாகும்.

அடுத்த நிதியாண்டில் அமலாகும் வாய்ப்புள்ள இந்த பரிந்துரையால், அரசுக்கு ஆண்டுக்கு, 1.02 லட்சம் கோடி செலவாகும். இதில் ரயில்வேத் துறை தன் ஊழியர்களுக்கு, 28,450 கோடியை தர நேரிடும். இது, அரசின் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்காது என, தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.
மேலும், முந்தைய ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை ஏற்கப்பட்டு, அதன் பலன்கள் காலதாமதமாக தந்ததால், அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவினம் போல, இத்தடவை வராது.

இந்த அறிக்கையில் மொத்தமுள்ள அரசு ஊழியர்களில், 29 சதவீதம் பேர், 50 முதல், 60 வயதுள்ளவர்கள். சில ஆண்டுகளில் இவர்கள் ஓய்வு பெறுவதால், மத்திய அரசு ஊழியர்கள் எண்ணிக்கை குறையும்.

இதை அரசு எளிதாக நிரப்பும் என்றாலும், அடுத்தடுத்த பதவி உயர்வு மூலம் பணியாளர்களை நிரப்பும் நடைமுறையால், நிர்வாகம் சிறப்படையுமா என்பது குறித்து இனி அரசு முடிவு எடுக்கலாம். ஏனெனில், திறன்மிக்கவர்களை அரசுப் பணியில் அமர்த்த கமிஷன் ஆலோசனை தெரிவித்திருக்கிறது.

சமீபத்தில் உயர் அதிகாரிகள் ஆற்றும் பணிகளில் ஊழல் முறைகேடு இருப்பின், உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசு, 'சி அண்டு டி பிரிவு சேர்க்கையில் நேரடித்தேர்வு கிடையாது' என, அறிவித்திருக்கிறது.

இப்பிரிவில் பணியாற்றுவோருக்கு இனி மாதச் சம்பளம், 18 ஆயிரம் என்பதும், மற்ற அரசு பணிச்சலுகைகள் இருப்பதும், அரசு வேலை மீது அதிக ஈர்ப்பு ஏற்படுத்தும். அதேபோல, ஐ.ஏ.எஸ்., பதவியில் சேரும் ஒருவர், இனி மாதச்சம்பளம், 50 ஆயிரத்துக்கு குறையாமல் பெறலாம். 

மற்ற சம்பளப்படிகள் ஒழங்குபடுத்தப்பட்டது நல்ல அணுகுமுறையாகும். ஆனால், பணியில் இருப்போர் திறமையை அளவிடும் நடைமுறை வரப்போவது நிச்சயம். 

ஏற்கனவே குறித்த நேரத்தில் பணிக்கு வருவது, கோப்புகளை காத்திருக்காமல் அனுப்புவது, சிவப்பு நாடா அணுகுமுறைக்கு தடை கொண்டு வரும் முயற்சிகளாகும். நிரந்தர வேலை, ஓய்வு பெற்ற பின் பென்ஷன் என்ற கருத்து மேலோங்கும் போது, கட்டுப்பாடு வளையத்திற்குள் பணியாளர்கள் வரலாம். 

அமெரிக்காவில், லட்சம் பேருக்கு மேல் உள்ள அரசு ஊழியர் எண்ணிக்கை சதவீதத்தை ஒப்பிட்டால், அதில் மூன்றில் ஒரு பங்கு கூட இங்கு இல்லை என்ற வாதம் சரியானதல்ல.

இத்தடவை துணை ராணுவப் பணியில் இருப்பவர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு தருவது, உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த உதவிடும்.
இச்சம்பள உயர்வு விலைவாசி உயர்வை அதிகரிக்கும் என்பதை விட, நாடு முழுவதும் பலரது வாங்கும் சக்தி திறனையும், சேமிப்பையும் அதிகரிக்கும். இது, இன்றைய இந்தியப் பொருளாதாரம் சமநிலை பெற உதவும். 

மாநில அரசுகள் இதை அமல்படுத்தும் போது, நிதிச் சுமை ஏற்படும் என்றாலும், வளர்ச்சிப் பணிகள் தவிர, கவர்ச்சியாக அளிக்கும் மானியங்களை குறைத்தால் சமாளிக்கலாம். அரசு பணியாளர்கள் பலரது ஊழல் ஆதரவு மனோபாவம் குறைவதற்கு, சம்பள உயர்வு உதவ வேண்டும்.சராசரி ஆயுள் அதிகரித்ததால், இனி வரும் காலங்களில் பென்ஷன் சுமை பெரிதாகலாம். அதற்கு மத்திய அரசு புதிய அணுகுமுறைகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive