தீபாவளி பண்டிகை, 10ம் தேதி செவ்வாய் கிழமை, கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு ஆகிய இருநாள் வார விடுமுறை உள்ள நிலையில், நடுவில் ஒருநாள், திங்கள்
மட்டும், வேலை நாளாக இருக்கிறது.
எனவே, திங்கள் கிழமையும் விடுமுறை
அறிவித்தால், வெளியூர் சென்று, பண்டிகையை கொண்டாடுவோருக்கு வசதியாக
இருக்கும் என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து கோரிக்கை
வந்தது.இதுகுறித்து, அந்தந்த மாவட்ட அளவில் முடிவு எடுத்துக் கொள்ளுமாறு,
பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வேலுார், சேலம்
உள்ளிட்ட சில மாவட்டங்களில், திங்கள் மற்றும் புதன் கிழமைகள், உள்ளூர்
விடுமுறையாக அறிவித்து உள்ளனர்.சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கோவை போன்ற
நகரங்களில், செவ்வாய் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே
நேரத்தில், புதன் கிழமை அன்று, அரசு பள்ளி ஆசிரியர்கள், பண்டிகை கால
விடுப்பு எடுக்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, முதன்மை கல்வி
அதிகாரிகளான சி.இ.ஓ.,க்கள் கூறுகையில், 'பள்ளிகளில், மூன்றில் ஒரு பங்கு
ஆசிரியர்களுக்கு மட்டுமே, பண்டிகை கால விடுப்புக்கு அனுமதி அளிக்க
முடியும். ஏனென்றால், இரண்டு பங்கு ஆசிரியர் இல்லாவிட்டால், உள்ளூர்
விடுமுறை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேநேரம், மாணவர்கள் விடுப்பு
எடுத்தால், அதை தடுக்க முடியாது; பள்ளிக்கு விடுமுறை தான்' என்றனர்.
Source: Dinamalar News -
Click Here For View Original News
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...