மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைக் குறைப்பது மற்றும் குறுக்கீடு
செய்வது ஆகிய மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து 19-ம் தேதி ரிசர்வ்
வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு (casual leave) எடுக்கும் போராட்டம்
நடத்த முடிவெடுத்துள்ளனர்.மத்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள், மற்றும்
ஊழியர்களை உள்ளடக்கிய 4 அமைப்புகளின் தொகுப்பான ரிசர்வ் வங்கி
அதிகாரிகள்மற்றும் பணியாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பு நவம்பர் 19-ம் தேதி
தற்செயல் விடுப்பு எடுப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
இதனை அனைத்திந்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பு தலைமைச் செயலர் சமீர் கோஷ் தெரிவித்தார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிதிக் கொள்கைக்கான கமிட்டியை அமைத்து, இதுவரை மத்திய ரிசர்வ் வங்கி மட்டுமே கவனித்து வந்த நிதிக்கொள்கையில் தலையீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதனை எதிர்த்து இந்த போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.ஆர்.பி.ஐ அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், வரைவு நிதிச் சட்டம் மற்றும் சில சீர்திருத்த சட்டங்கள் மூலம் மத்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முடக்க நினக்கும் மத்திய அரசுக்கு வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்கவே இந்த வேலை நிறுத்த அறிவிப்பு. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...