தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இந்த தீபாவளி எப்படி
வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன்
இருந்தான்.
அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.
இதை
அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு
பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம்
பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன்
போரிட்டார்.அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர்
மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம்
அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று
உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.
அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது
அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும்.
என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு
வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும்
சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து
மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது,
வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி
திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. வால்மீகு ராமாயணத்தில் முதன்
முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.
பாடசாலை வாசகர்கள் ,ஆசிரியர் ,குடும்பத்தார் , அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் .
ReplyDeleteநன்றி
அன்புடன் ராம் ராம் ...
If both cases are true why it comes in different days sometimes in October and sometimes September. Because these two are not the real incidents behind celebrating Deepawali. It is connected with Rain, No moon day(Amavasai), Light and some social service.
ReplyDeleteWe share the festival of Deepawali. Thank you padasalai.
ReplyDelete