ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருத்தி, கற்றல் குறைபாடுள்ள சிறுமிக்கு பாடம் நடத்துகிறாள். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியில்,
ஐந்தாம் வகுப்பு படிப்பவள் காயத்ரி. இவளது வீட்டுக்கு அருகில், ப்ரியா என்ற
சிறுமி, பெற்றோருடன் வசிக்கிறாள்; கற்றலில் குறைபாடு உள்ளவள். மற்ற
மாணவியரை போல், கல்வி கற்க முடியாததால், வீட்டில் இருக்கிறாள்.
இதை அறிந்த காயத்ரி, பள்ளி முடிந்ததும் நேராக, ப்ரியா வீட்டுக்கு
சென்று, அவளுக்கு எழுத, படிக்க கற்றுக் கொடுத்து வருகிறாள். வீட்டு
முற்றத்தில், மணலில் எழுத்துக்கள் எழுதிக் காட்டி, அந்த சிறுமிக்கு எழுதும்
திறனை வளர்க்கிறாள். ப்ரியாவிடம் மாற்றத்தை கண்ட அவளது தாய், தினமும்
காயத்ரி பாடம் நடத்த, ஏற்பாடுசெய்துள்ளார்.
இதேபோல், பரமேஸ்வரி என்ற ஏழாம் வகுப்பு மாணவி, தன் வீட்டுக்கு அருகில்
வசிக்கும் முதியவர் வளர்க்கும் செடிகளுக்கு, தினமும் தண்ணீர் ஊற்றி
வருகிறாள். எட்டாம் வகுப்பு மாணவி சவுமியா, தேவகோட்டை சந்தைப் பகுதியில்,
மோசமான நிலையில் சுற்றித் திரிந்த இளம் பெண்ணுக்கு, துணிகள் வாங்கிக்
கொடுத்து, இயல்பு நிலைக்கு மாற வைத்து உள்ளார்.
இம்மூன்று மாணவியரையும், தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...