பள்ளி குழந்தைகள் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு முன், பள்ளி கல்வித்துறை மூலம்,
'சஞ்சாயிகா' என்ற சிறுசேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
துவக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திட்டம்,
நாளடைவில் முடங்கியது. இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவியர் மத்தியில்,
பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. அலைபேசி, சினிமா, சுற்றுலா என, வீணாக
இப்பணத்தை செலவிடுகின்றனர்.
சிறு வயதில் மாணவ, மாணவியர் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த
விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பள்ளிகளில், 'சஞ்சாயிகா'
சிறுசேமிப்பு திட்டத்துக்கு புத்துயிர் தந்து, தமிழகம் முழுவதும் அரசு
பள்ளிகளில் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
I need more easier
ReplyDelete