Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போலீஸ் இளைஞர் படைபணி நிரந்தரமாக்க ஏற்பாடு தேர்வுக்கு விண்ணப்பம்

        தமிழகத்தில் போலீஸ் இளைஞர் படையினர் அனைவருக்கும் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர்.

              தமிழகத்தில் கடந்தாண்டு செப்டம்பரில், போலீஸ் இளைஞர் படையினர் 10 ஆயிரத்து 500 பேர், உடல் தகுதி,மருத்துவம், எழுத்துத் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு கம்ப்யூட்டர், டிரைவர், அலுவலக உதவியாளர் பணி வழங்கப்பட்டது. இதில் பணி சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக பலர் வேலையை விட்டு விட்டனர்.

தற்போது 8 ஆயிரத்து 600 பேர் பணியில் உள்ளனர். இவர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதையடுத்து நேற்று இளைஞர் படையினருக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இதில் அவர்களின் பாஸ்போர்ட் போட்டோ ஒட்டி,பெயர், விலாசம், வயது, பணியாற்றும் ஸ்டேஷன் உட்பட பல தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கான தேர்வுகள் வரும் நவ.29ல் நடக்கஉள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் நவ.17, 18ல் இளைஞர்களுக்கு வழங்கப்படஉள்ளது.தேர்வு தயாராக அறிவுரை: இளைஞர்கள் படையில் உள்ள வீரர்கள் நவ.29ல் நடக்கும் போலீசாருக்கான தேர்வில் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதில் பொது அறிவு, ஸ்டேஷன் நடைமுறைகள்,உளவியல் சம்பந்தமானவை, குற்றவழக்குகள் விபரங்கள்கேட்கப்பட உள்ளன. 




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive