'மாணவ, மாணவியர் ஜீன்ஸ் அணிந்து வந்தால், அவர்களுக்கு, 'கேம்பஸ்
இன்டர்வியூ' எனப்படும், வளாக நேர்காணலில் வேலை வழங்கப்படாது'
என,ஐ.ஐ.டி.,யில் ஆடைக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில், கல்லுாரி வளாகத்தில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம், பணி வாய்ப்பு வழங்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெற்றால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உடனடியாக, பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியில் சேரலாம். இதன்படி, இந்த ஆண்டு பட்டப்படிப்பில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை மற்றும் அரசு இன்ஜி., கல்லுாரிகள், வி.ஐ.டி., பல்கலை, எஸ்.ஆர்.எம்., பல்கலை உள்ளிட்டவற்றில், கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மத்திய
அரசின் உயர் கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யில், இறுதி ஆண்டில்
இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு, டிச., 1ல், கேம்பஸ் இன்டர்வியூ
நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு,
ஆடைக் கட்டுப்பாட்டை, ஐ.ஐ.டி., அறிவித்துஉள்ளது.
அதன் விவரம்:* கல்லுாரி வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வரும் போதும், வேலைவாய்ப்பு தேர்வு எழுத வரும் போதும், மாணவர்கள் காலர் வைத்த சட்டை அல்லது காலர் வைத்த டீ - ஷர்ட் அணியலாம்; ஆனால் அதில், எந்த எழுத்துக்களும் இருக்கக் கூடாது. சட்டையை, 'இன்சர்ட்' செய்திருக்க வேண்டும். முழுக்கால் பேன்ட் அணிய வேண்டும்.* மாணவியர், 'சல்வார் கமீஸ்' எனப்படும் தொளதொள ஆடை மட்டுமே அணியலாம்; தலை முடியை முறையாக சீவியிருக்க வேண்டும். நன்றாக சுத்தம் செய்து, 'பாலிஷ்' செய்யப்பட்ட காலணி அணிந்திருக்க வேண்டும். 'ப்லிப், ப்லாப்' எனப்படும், ரப்பர் மற்றும் கழிப்பறையில் பயன்படுத்தும் காலணிகளை கண்டிப்பாக அணியக் கூடாது.* டிச., 1 முதல் நடக்கும் இன்டர்வியூவில் பங்கேற்க வரும் போது,அலுவலக ரீதியாக பயன்படுத்தும் முழுக்கை சட்டை மற்றும் முழுக்கால் பேன்ட் மட்டுமே அணியலாம். மாணவ, மாணவியர் கண்டிப்பாக,ஜீன்ஸ் அணியக் கூடாது.* இந்த ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால், வேலை வாய்ப்புக்கான நடைமுறையில் அனுமதி மறுக்கப்படும்.இவ்வாறு சென்னை ஐ.ஐ.டி., உத்தரவிட்டுள்ளது.

Pl seve and safel our culture... Not only in campus interview but all other private jobs...
ReplyDeleteதமிழ் கலாச்சரம் பெருகட்டும்
ReplyDelete