Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவரை மனிதக் கழிவை அகற்றச் சொன்னதாக ஆசிரியை பணி இடைநீக்கம் - கைது

         மாணவரை மனிதக் கழிவை கையால் எடுக்கச் சொன்ன நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும், அவரைப் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டர்.
 இதுகுறித்த விவரம்: 

நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட ராமாபுரம்புதூர் காலனியைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் சசிதரன் (7). இவர் அங்குள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்த வருகிறார். வியாழக்கிழமை மாலை சக மாணவர் ஒருவர் வகுப்பறையில் மலம் கழித்துவிட்டார் எனவும், அதைப் பார்த்த வகுப்பாசிரியை விஜயலட்சுமி (35) மாணவர் சசிதரனை மிரட்டி, கையால் அந்த மலத்தை அள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டுக்குச் சென்ற மாணவர் சசிதரன், தனது பெற்றோரிடம் இதைத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் பெற்றோர், உறவினர்கள் 150 பேர் வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்று, முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதவன், மாலதி ஆகியோர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட ஆசிரியையை இட மாற்றம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில், குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழைத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து இரண்டு நாள்களில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து மாணவர் சசிதரனின் தந்தை வீராசாமி, நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பள்ளிக்குச் சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், டி.எஸ்.பி. மனோகரன், கோட்டாட்சியர் எம்.கண்ணன் ஆகியோர் ஆசிரியை, மாணவரிடம் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆசிரியை விஜயலட்சுமியை நாமக்கல் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், ஆசிரியை விஜயலட்சுமியை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) அல்லிமுத்து உத்தரவிட்டார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive