அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கக் கோரி, கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமைஆர்ப்பாட்டம் நடத்தினர்.திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயலர் வெ.குமரேசன் தலைமை வகித்தார்.
மாநிலத் தலைவர் உ.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தின் போது, 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலை கட்டாய பாடமாக்க வேண்டும். சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை நிகழாண்டிலேயே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கணினி பாடப் பிரிவு இல்லாத 800க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், அந்த பாடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷமிட்டனர். மாவட்டத் தலைவர் தேனரசு, செயலர் சத்யா உள்படபலர் கலந்து கொண்டனர்.
Sir arpaddathukku ethajum reply sonnangala sir.
ReplyDeleteKumaresan sir thank you so much sir.
ReplyDelete