தீபாவளி பண்டிகையின்போது பட் டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பாக
மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண் ணப்பன் பல்வேறு அறிவுரைகளை
வழங்கியுள்ளார். இதுகுறித்து மாணவர்கள் உறுதி மொழி எடுக்குமாறும்
அறிவுறுத்தி யுள்ளார். உறுதிமொழி விவரம்:
# பெரியவர்கள் உடனிருக்க பட்டாசுகளை வெடிப்போம்.
# பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்வோம்.
# திறந்தவெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிப்போம்.
#இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.
#அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்போம்.
#மருத்துவமனை, பள்ளிகள் முதலானவை அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.
#குடிசைகள் மற்றும் எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.
#ஒலியைக் குறைப்போம், செவியைக் காப்போம்.
#கொண்டாடுவோம், கொண் டாடுவோம், விபத்தில்லா தீபாவளி யைக் கொண்டாடுவோம்.
மேற்கண்ட உறுதிமொழியை எடுக்குமாறு பள்ளி மாணவ-மாண விகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...