இந்திய அரசின் வேலைவாய்ப்பு சம்மந்தமான முன்னுரிமைப் பட்டியலில் கலப்பு திருமணத்திற்கு தனி இடம் உணடு. ஆனால் தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அது பெயரளவில் கூட இல்லாத சூழல் இருந்ததை தமிழக அரசே மறுக்காது...
கலப்பு திருமணம் முன்னுரிமை பட்டியலில் தங்கள் பெயர்கள் வந்த
நாள் முதல் இன்று வரை குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையேனும் அந்தந்த மாவட்ட
வேலை வாய்ப்பு அலுவலகத்தை அனுகாத தம்பதியினரே இல்லை என்ற உண்மை எத்தனை
அரசியல்வாதிகளுக்கு தெரியும்?
அதிலும் பட்டப்படிப்பு, ஆசிரியர் படிப்பு மற்றும் முதுகலைப்
படிப்பை முடித்து முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றவர்களின் நிலை மிகவும்
வருத்தம் அளிக்கிறது.
இது சார்ந்த வினாக்களை வேலை வாய்ப்பு அலுவலகம் சென்று
கேட்டாலோ அல்லது தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக வனவினாலோ தகவல்கள்
எங்களிடம் இல்லை என்பதே அவர்களின் பதில்.
எந்த பிடிப்பும், முறையான வழியும், ஆதரவும் இல்லாத சாதாரண
தம்பதிகளாக கலப்பு திருமண முன்னுரிமையை எதிபார்த்துக் காத்துக் கொண்டுள்ள
மக்கள் இது சார்ந்த விளக்கம் அரசிடம் இருந்து பெற வழிதான் என்ன?
நியாயமான உரிமைகள் பெறக் கூட நாள் பல காத்துக் கிடந்ததும்
கண்டு கொள்ள ஆள் இல்லை என்பதை குற்றச்சாட்டுகளாக முன் வைக்கும் கலப்பு
திருமணம் புரிந்தோர்.
அரசின் கொள்கை முடிவுகள் பொதுவாக யார் உரிமைகளையும்
பாதிக்காதவாறும், கடமைகளை மீறாதவாறும் இருக்கும் பட்சத்தில் சரிவிகித
முறையில் நாட்டின் முன்னேற்றம் அமையும்.
திக்கற்ற சூழலில் வாழ்க்கையை கடத்திக் கொண்டு உள்ள கலப்பு
திருமணம் புரிந்தோர் வாழ்வை வளமானதாக மாற்ற வேண்டாம் முடிந்த வரை வறட்சி
அற்றதாக மாற்ற தமிழக அரசு விரைவில் நடவடிக்கைகள் எடுத்து உதவி செய்ய
வேண்டும் என கோரிக்கைகளை முன் வைக்கும் கலப்பு திருமணம் புரிந்த வேலை இல்லா
பட்டதாரிகள்.
ஆக்கம்: சந்துரு... கோவை.
தென்னக கல்விக் குழு.
சுயநலஅரசு
ReplyDeleteஇது அரசு அல்ல நாட்டின் அசிங்கம்
ReplyDeleteme toooo
ReplyDeleteNan hindhu en kanavar muslim Nangal kalappu thurumanam seithom 3 yrs before...yathenum uthavi kidaikuma
ReplyDelete