தமிழக வனத் துறையில், 165 வனவர் மற்றும், 16 களப்பணியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, பிப்ரவரியில் நடந்தது. 35 ஆயிரம் பேர்
பங்கேற்றனர்.
இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரம், வனத்துறையின்,
www.forests.tn.nic.in இணையதளத்தில் சமீபத்தில் வெளியானது.ஆனாலும்,
நேர்முகத் தேர்வுக்கு எத்தனை பேர் அழைக்கப்படுவர், 'கட் - ஆப்' மதிப்பெண்
வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து, தேர்வு எழுதிய சிலர் கூறியதாவது:
தேர்வில் மொத்த மதிப்பெண், 250. தற்போது, 200க்கு மாற்றப்பட்டு, மதிப்பெண்
வெளியிடப்பட்டுள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில்,
இறுதிப் பட்டியல் தான் வெளியிடப்படுகிறது. 'கட் - ஆப்' மதிப்பெண்கள்
வெளியிடுவதில்லை. வனத்துறையாவது ஒளிவுமறைவின்றி, 'கட் - ஆப்' வெளியிட
வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...