ஆம்பூர் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்து
கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து
வருகின்றனர்.
அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக கானாற்றில் ஏற்பட்ட வெள்ளம் ஆம்பூர்
அருகே ஆலாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கியது.
மேலும் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிடிந்து
விழுந்தது. பள்ளியின் கட்டடமும் தண்ணீர் தேங்கியதால் சேதமடைந்து விழும்
நிலையில் உள்ளது. இதனால் அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அக்கட்டடம்
பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு
கதவு திறந்திருந்தது தெரியவந்தது. மேலும் உள்ளே இருந்த அலமாரி
உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினி, 2 தொலைக்காட்சிப்
பெட்டிகள், அச்சு இயந்திரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. புகாரின்
பேரில் ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை நடத்தினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...