தபால்காரர் (போஸ்ட்மென்), மெயில் கார்டு தேர்வுக்கான அனுமதிச் சீட்டைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இதற்கான தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ 15) நடைபெறவுள்ளது. காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வுக்குத் தகுதியான நபர்களுக்கான அனுமதிச்சீட்டு ஜ்ஜ்ஜ்.க்ர்ல்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இணையதளத்தில் இருந்து தங்களின் அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் வாயிலாக அனுமதிச் சீட்டு அனுப்பப்படாது.அனுமதிச் சீட்டில் தேர்வு மையம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்றும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலக தேர்வின் விடைக்குறிப்புகள்
ReplyDeleteஎப்போது வரும்? Pls answer me