'செல்வமகள் சேமிப்பு' திட்டத்தில், பெண் குழந்தைகளை சேர்ப்பதற்கான வயது வரம்பு, 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரியில், 'சுகன்யா சம்ரிதி' என்ற பெயரில், 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான சிறு சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் தமிழகத்தில், செல்வமகள் சேமிப்பு திட்டம் பெயரில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அறிமுக சலுகையாக, 11 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளும் திட்டத்தில் சேர அனுமதிக்கப்பட்டனர். இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பு உருவாகி உள்ளதால், தற்போது, 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், இத்திட்டத்தில் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வட்ட போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
செல்வ மகள் சேமிப்பு திட்டம் மூலம் நாடு முழுவதும், இதுவரை, 73 லட்சம் சேமிப்பு கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில், 11 லட்சம் சேமிப்பு கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு, 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...