உலகில் உள்ள மத்திய வங்கிகளின் நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அனைத்து வங்கிகளுக்கும் வரைமுறை மற்றும் விதிகளை உருவாக்கி வருவது பிஐஎஸ் என அழைக்கப்படும் சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியாகும் (Bank for International Settlements - BIS).
இந்நிலையில்,
முக்கியத்துவம் வாய்ந்த இந்த வங்கியின் துணைத்தலைவர் பதவிக்கு இந்திய
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வங்கியின்
துணைத்தலைவராக அவர் 3 ஆண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,
சுவிட்சர்லாந்தில் நடந்த பிஐஎஸ் இயக்குநர்கள் வாரியக் கூட்டத்தில் இந்த
முடிவு எடுக்கப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
முதல் முறையாக இந்தியர் ஒருவர் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...