வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் எத்தனை பேர் என்பது குறித்து தமிழகம் முழுவதும் தீவிரமாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் பள்ளி மாணவர்களின் பாடபுத்தகங்கள், நோட்டுகள் சேதமடைந்துள்ளன.எனவே, பாதிக்கப்பட்ட பகுதி களில் மாணவர்களுக்கு உடனடியாக இலவச பாடபுத்தகங்கள், நோட்டுகள், ஒரு செட் சீருடை ஆகியவற்றை வழங்க முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தங்கள் மாவட்டங் களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பற்றிய விவரங்களை வகுப்பு வாரியாக கணக்கிட்டு உடனடியாக தேவையான பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடை ஆகியவற்றை வழங்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உபரியாக புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் இருந்தால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறும், கூடுதல் தேவை இருப்பின் உடனடியாகதொடக்கக் கல்வி இயக்ககத்துக்கும் பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கும் பட்டியல் அனுப்புமாறும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி திட்டம்), மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் கணக்கெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...